52-வது தேசிய பாதுகாப்பு வார நிறைவு விழா


52-வது தேசிய பாதுகாப்பு வார நிறைவு விழா
x

52-வது தேசிய பாதுகாப்பு வார நிறைவு விழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், கோவிந்தபுரம் ராம்கோ சிமெண்டு ஆலையில் 52-வது தேசிய பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இதையொட்டி இந்த ஆண்டு கருத்துருவான "தீங்கற்ற பணியிடமே நமது குறிக்கோள்" என்ற தலைப்பின் கீழ் ஆலை வளாகத்தில் பாதுகாப்பு கொடியினை தினமும் காலை 8 மணியளவில் துறைத்தலைவர்களால் ஏற்றி, உரையாற்றி கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நிறைவு விழா ராம்கோ மனமகிழ் மன்றத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் மாலதி, துணை இயக்குனர் சுசிலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பாதுகாப்பு வார விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள், பி.ஏ.சி.ஆர். ஐடிஐ மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் இல்லத்தரசிகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாதுகாப்பு பற்றிய முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. ஆலையின் தலைவர் மதுசூதனன் குல்கர்னி விழாவிற்கு தலைமையுரையும், எஸ்.வி.பி. அட்மின் ராமராஜ் மற்றும் மனிதவளத்துறையின் மூத்த பொதுமேலாளர் ஜான்சன் சிறப்புரையாற்றியும், பரிசுகள் வழங்கியும் விழாவை சிறப்பித்தனர். ஆலையின் பாதுகாப்புத்துறை அதிகாரி முருகராஜ் பாதுகாப்பு அறிக்கை சமர்பித்தார். விழாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு பற்றிய நாடகத்தையும், சொற்பொழிவுகளையும், பாதுகாப்பு பற்றிய பாடல்களையும் பாடினர். மனிதவளத்துறையின் ராஜமுருகன் மற்றும் சி.டி.எஸ். துறையின் முகுந்தன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினர். முன்னதாக ஆலையின் மின்னியல்துறையின் இதயசந்திரன் வரவேற்றார். முடிவில் இயந்திரவியல் துறையின் குழந்தை இயேசு நன்றி கூறினார்.


Next Story