ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ.55 லட்சம் நலத்திட்ட உதவி
கலவை தாலுகாவில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ.55 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்
ரூ.55 லட்சம் நலத்திட்ட உதவி
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில் ஜமாபந்தி 3 நாட்கள் நடைபெற்றது அப்போது 227 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 97 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 13 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
நேற்று ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி 97 நபர்களுக்கு ரூ.55 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சிறு வயதில் திருமணம்
திமிரி பகுதியில் சிறிய வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்வது அதிகமாக நடக்கிறது. இது வருத்தமாக உள்ளது. பெண்களை படிக்க விடுங்கள். பெண்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்றார்.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை கோட்டாட்சி தலைவர் வினோத்குமார், ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், கலவை பேரூராட்சி தலைவர் கலா சதீஷ், தாசில்தார்கள் மதிவாணன், இந்துமதி, திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயஸ்ரீ, நவாஸ் மற்றும் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கலெக்டர் அலுவலக பொது மேலாளர் பாபு, மண்டல துணை தாசில்தார் கன்னியப்பன், தேவராஜ், வருவாய் ஆய்வாளர்கள் செல்வகுமார், ஜெகநாதன், கிராம அதிகாரிகள் ஸ்ரீதர், தீனதயாளன், வினோத், கீதா ராணி, விஜி மற்றும் கிராம உதவியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.