திருச்சியில் 550 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்
திருச்சியில் 550 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி
திருச்சி அரியமங்கலம் திருமகள் தெருவில் கலப்பட டீத்தூள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு குழுவினர் அந்த பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது செல்வின் என்பவரது குடோனில் 550 கிலோ கலப்பட டீத்தூள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 550 கிலோ கலப்பட டீத்தூள், கலப்படத்துக்கு பயன்படுத்திய பொருட்கள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story