சேலத்தில் 55,028 பேர் எழுதினார்கள்


சேலத்தில் 55,028 பேர் எழுதினார்கள்
x

சேலத்தில் குரூப்-2 தேர்வை 55 ஆயிரத்து 28 பேர் எழுதினார்கள். தேர்வு மையத்தை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

சேலம்

சேலம்:

சேலத்தில் குரூப்-2 தேர்வை 55 ஆயிரத்து 28 பேர் எழுதினார்கள். தேர்வு மையத்தை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

குரூப்-2 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான குரூப்-2 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. இதன்படி சேலம் மாவட்டத்திலும் தேர்வு நடந்தது. மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 63 ஆயிரத்து 437 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 161 தேர்வு மையங்களில் 218 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதன்படி தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் அடையாள அட்டையுடன் தேர்வு அறைக்கு நேற்று காலை 8 மணி முதல் வரத்தொடங்கினர். அப்போது தேர்வு அறையில் இருந்த பணியாளர்கள், தேர்வர்களின் உடல் வெப்ப நிலையை கண்டறிந்து, கையில் சானிடைசர் தெளித்த பிறகு அறைக்குள் அனுமதித்தனர்.

கலெக்டர் கார்மேகம் ஆய்வு

தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 55 ஆயிரத்து 28 பேர் எழுதினார்கள். தேர்வு மையங்களை பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். ஒரு சில மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. இதனிடையே கலெக்டர் கார்மேகம் சேலம் மரவனேரியில் உள்ள பாலபாரதி பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

பின்னர் கலெக்டர் கார்மேகம் கூறும் போது, மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு அமைதியாக நடைபெற்றது. விண்ணப்பித்தவர்களில் 8 ஆயிரத்து 409 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வர்கள் மையத்திற்கு சரியான நேரத்தில் வருவதற்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன என்றார்.


Next Story