56 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருச்சி பெரியகடை வீதியில் 56 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி
திருச்சி பெரியகடை வீதி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதலெட்சுமி, கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான அலுவலர்கள் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது பெரியகடை வீதி ராணி தெருவில் சீனிவாசன் என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் 56 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.6 லட்சத்து 57 ஆயிரத்து 320, 9 செல்போன்கள், 227 கிராம் வெள்ளி நாணயங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story