ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ.56½ லட்சம் உண்டியல் காணிக்கை


ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ.56½ லட்சம் உண்டியல் காணிக்கை
x

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ.56½ லட்சம் உண்டியல் காணிக்கை

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வருகின்றனர். இந்த நிலையில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியில் பக்தர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இதில் தட்டு காணிக்கை. உண்டியல் மூலம் ரூ.10 லட்சத்து 82 ஆயிரத்து 600-ம், நிரந்தர உண்டியல் மூலம் ரூ.45 லட்சத்து 68 ஆயிரத்து 922-ம் என மொத்தம் ரூ.56 லட்சத்து 51 ஆயிரத்து 22 காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது. மேலும் 291 கிராம் தங்கம், 291 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மாசாணி அம்மன் கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், அறங்காவலர்கள் திருமுருகன், மஞ்சுளா தேவி, தங்கமணி, மருதமுத்து மாசாணி அம்மன் கோவில் உதவி ஆனணயர் ரா.விஜயலட்சுமி, தேக்கம்பட்டி உதவி ஆனணயர் கைலாசமூர்த்தி, கண்காணிப்பாளர் புவனேஸ்வர், ஆய்வர் ப.சித்ரா, பாதுகாப்பு அதிகாரி முத்துராமன் மற்றும் சரவணம்பட்டி பகுதியில் இருந்து 300 தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story