மதுரை நகர், புறநகரில் புகையிலை பொருட்கள் விற்ற 56 பேர் கைது
மதுரை நகர், புறநகரில் புகையிலை பொருட்கள் விற்ற 56 பேர் கைது செய்யப்பட்டனர்
மதுரை
மதுரை மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி, நகரில் உள்ள விளக்குத்தூண், தெப்பக்குளம், கீரைத்துறை, தெற்குவாசல், திடீர் நகர், சுப்பிரமணியபுரம், திலகர்திடல், கரிமேடு உள்ளிட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதுபோல், புறநகரில் 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்த வழக்குகளில் தொடர்புடைய 56 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story