வண்டலூர் பூங்காவை 4 நாட்களில் 56 ஆயிரம் பேர் சுற்றி பார்த்தனர்; 2 நாட்களில் 950 பேர் சிங்கம் உலாவிட பகுதியை பார்வையிட்டனர்


வண்டலூர் பூங்காவை 4 நாட்களில் 56 ஆயிரம் பேர் சுற்றி பார்த்தனர்; 2 நாட்களில் 950 பேர் சிங்கம் உலாவிட பகுதியை பார்வையிட்டனர்
x

வண்டலூர் பூங்காவை 4 நாட்களில் 56 ஆயிரம் பேர் சுற்றி பார்த்தனர். 2 நாட்களில் 950 பேர் சிங்கம் உலாவிட பகுதியை பார்வையிட்டனர்.

செங்கல்பட்டு

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 1977 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக வண்டலூர் பூங்காவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் செங்கல்பட்டு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து பூங்காவில் உள்ள சிங்கம், புலி, யானை, மனித குரங்கு, காண்டாமிருகம் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.

இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

தொடர் விடுமுறை என்பதால் கடந்த சனிக்கிழமை பூங்காவிற்கு 15 ஆயிரம் பேர், ஞாயிற்றுக்கிழமை 21 ஆயிரம் பேர், திங்கட்கிழமை 18 ஆயிரம் பேர் வருகை தந்தனர். வழக்கமாக செவ்வாய்க்கிழமை பூங்காவிற்கு விடுமுறை ஆனால் நேற்று செவ்வாய்க்கிழமை வண்டலூர் பூங்கா பார்வையாளர்களுக்கு திறந்துவைக்கப்பட்டது அன்றைய தினம் 2 ஆயிரம் பேர் பூங்காவுக்கு வருகை தந்தனர் ஆக மொத்தம் கடந்த 4 நாட்களில் 56 ஆயிரம் பேர் பூங்காவை சுற்றி பார்த்தனர். மேலும் பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட சிங்கம் மற்றும் மான் உலாவிட பகுதியை கடந்த 2 நாட்களில் 950 பேர் சிறப்பு கட்டணம் செலுத்தி பார்த்து ரசித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story