5,616 பேர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதினர்
நெல்லையில் 5,616 பேர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதினர்.
நெல்லையில் 5,616 பேர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதினர்.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு
தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு 6,909 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நெல்லையில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த மையங்களில் பாதுகாப்பு பணிக்காக ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 21 இன்ஸ்பெக்டர்கள், 69 சப்-இன்ஸ்பெக்டர்கள், அமைச்சு பணியாளர்கள் என 586 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். காலை 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரையிலும் தேர்வு நடைபெற்றது.
5,616 பேர் எழுதினர்
முன்னதாக தேர்வு எழுத வந்தவர்கள் கடுமையான பரிசோதனைக்கு பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். நெல்லையில் நடந்த தேர்வில் ஆண் விண்ணப்பதாரர்கள் 4,312 பேரும், பெண் விண்ணப்பதாரர்கள் 1,304 பேரும் என மொத்தம் 5,616 பேர் தேர்வு எழுதினர். தேர்வுக்கு விண்ணப்பித்ததில் 1,293 பேர் தேர்வு எழுத வரவில்லை. தென் மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆகியோர் தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வு நடக்கிறது. இதில் 725 பேர் எழுத உள்ளனர்.