பொள்ளாச்சி, ஆனைமலையில்சட்டவிரோதமாக விற்க முயன்ற 568 மதுபாட்டில்கள் பறிமுதல்; 7 பேர் கைது


பொள்ளாச்சி, ஆனைமலையில்சட்டவிரோதமாக விற்க முயன்ற 568 மதுபாட்டில்கள் பறிமுதல்; 7 பேர் கைது
x
தினத்தந்தி 2 Oct 2023 12:15 AM IST (Updated: 2 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி, ஆனைமலையில் சட்டவிரோதமாக விற்க முயன்ற 568 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலையில் சட்டவிரோதமாக விற்க முயன்ற 568 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆட்டோவில் கடத்தல்

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பொள்ளாச்சி மேற்கு போலீசார் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்தவழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வேகமாக வந்த ஒரு ஆட்டோவை தடுத்தி நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது ஆட்டோவில் மதுபாட்டில்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதுதொடர்பாக ஆட்டோவில் இருந்த 5 பேரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சிவகங்கையை சேர்ந்த பாக்கியராஜ்(வயது 41), ராமநாதபுரத்தை சேர்ந்த கமலேஷ்(31) மற்றும் ஆட்டோ டிரைவர் மனோகரன்(61) ஆகியோர் என்பதும், இதில் பாக்கியராஜ், கமலேஷ் இருவரும் வஞ்சியாபுரத்தில் தங்கி கூலி வேலை செய்து வருவதும், காந்தி ஜெயந்தியையொட்டி வஞ்சியாபுரம் பிரிவு கால்வாய் மேடு அருகே கள்ள சந்தையில் விற்பனைக்காக டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி கொண்டு சென்றதும் தெரிந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஆட்டோவுடன் 430 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் பொள்ளாச்சி ஏ.டி.எஸ்.சி. தியேட்டர் ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக சென்ற இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வடுகபாளையம் பகுதியில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை கொண்டு சென்றது தெரிய வந்தது. மேலும் அவர்கள் வடுகபாளையத்தை சேர்ந்த கார்த்திக்(32), அருண்குமார்(26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சமத்தூர் மணல்மேடு அருகே கோட்டூர் போலீசார் ரோந்து சென்று சட்டவிரோதமாக மது விற்ற சிவகங்கையை சேர்ந்த தினகரன்(41) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ௮ மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆனைமலை

ஆனைமலை அடுத்த கோழிபண்ணை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக காளியாபுரம் பகுதியை சேர்ந்த செந்தில்( வயது 53) என்பவரை ஆனைமலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதனால் பொள்ளாச்சி, ஆனைமலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 568 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதில் 7 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story