574 குவிண்டால் பருத்தி ரூ.36 லட்சத்து 18 ஆயிரத்துக்கு ஏலம்
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் 574 குவிண்டால் பருத்தி ரூ.36 லட்சத்து 18 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் 574 குவிண்டால் பருத்தி ரூ.36 லட்சத்து 18 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
பருத்தி ஏலம்
மயிலாடுதுறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் சோழம்பேட்டையில் உள்ள திறந்தவெளி கி்டங்கில் விவசாயிகளிடம் இருந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். ஏலத்தை மயிலாடுதுறை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில் கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் நடத்தினர்.
ரூ.36 லட்சம்
இந்த ஏலத்தில் குறைந்தபட்ச விலையாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.5 ஆயிரத்து 839-க்கும், அதிகபட்ச விலையாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.6 ஆயிரத்து 769-க்கும், சராசரி விலையாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ. 6 ஆயிரத்து 304 வீதம் ஏலம் போனது. மொத்தம் 574 குவின்டால் பருத்தி ரூ.36 லட்சத்து 18 ஆயிரத்துக்கு விலை போனது.இதைப்போல ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 2 மணிக்கு சோழம்பேட்டை திறந்தவெளி கிடங்கில் பருத்தி ஏலம் விடப்படும் என்றும், பருத்திக்கு உரிய தொகையை அன்றைய தினமோ அல்லது விடுமுறை நாளாக இருந்தால் மறு வங்கி வேலை நாட்களில் உடனடியாக விவசாயிகள் வங்கிகணக்கில் வரவு வைக்கப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.