32 பஞ்சாயத்துகளுக்கு 58 புதிய பேட்டரி வாகனங்கள்; அமைச்சர் வழங்கினார்


32 பஞ்சாயத்துகளுக்கு 58 புதிய பேட்டரி வாகனங்கள்; அமைச்சர் வழங்கினார்
x

ஆலங்குளம் யூனியனில் 32 பஞ்சாயத்துகளுக்கு 58 புதிய பேட்டரி வாகனங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட குருவன்கோட்டை, குறிப்பன்குளம், வீராணம், புதுப்பட்டி, நல்லூர், குத்தப்பாஞ்சான் உள்ளிட்ட 32 பஞ்சாயத்துகளில் குப்பைகளை சேகரிக்கும் வகையில், தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 36 லட்சத்து 88 ஆயிரம் செலவில் 58 புதிய பேட்டரி வாகனங்கள் வழங்கும் விழா, யூனியன் அலுவலகத்தில் நடந்தது. ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் புதிய பேட்டரி வாகனங்களை வழங்கி, கொடியசைத்து அவற்றின் சேவையை தொடங்கி வைத்தார். தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தர்மராஜ், நாகராஜன், தி.மு.க. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story