58-வது பிறந்த நாள்: அமித்ஷாவுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து


58-வது பிறந்த நாள்: அமித்ஷாவுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
x

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின்58-வது பிறந்தநாளையொட்டி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின்58-வது பிறந்தநாளையொட்டி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமித்ஷாவுக்கு, ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

58-வது பிறந்த நாள் கொண்டாடும் உங்களுக்கு என்னுடைய இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டுக்கும், மக்களுக்கும் தொடர்ந்து சேவையாற்றுவதற்காக மேலும் பல ஆண்டுகள் உங்களுக்கு நல்ல உடல்நலத்தையும், அமைதியையும் தரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story