தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்டு 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை


பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்டு 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா வருகிற 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு 5.8.22 அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது. இது செலாவணி முறிவு சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல. இந்த விடுமுறைக்கு பதிலாக 13.8.2022 அன்று அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story