வெள்ளலூரில்சரக்கு ஆட்டோ மோதி 5-ம் வகுப்பு மாணவன் பலி -குடியிருப்பு வளாகத்திலேயே நடந்த பரிதாபம்


வெள்ளலூரில்சரக்கு ஆட்டோ மோதி 5-ம் வகுப்பு மாணவன் பலி  -குடியிருப்பு வளாகத்திலேயே நடந்த பரிதாபம்
x

கோவை வெள்ளலூரில் குடியிருப்பு வளாகத்தில் சரக்கு ஆட்டோ மோதி 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

கோயம்புத்தூர்

போத்தனூர்

கோவை வெள்ளலூரில் குடியிருப்பு வளாகத்தில் சரக்கு ஆட்டோ மோதி 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

5-ம் வகுப்பு மாணவன்

கோவை அருகே உள்ள வெள்ளலூர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு ஏராளமானோர் குடியிருந்து வருகிறார்கள். இந்த குடியிருப்பை சேர்ந்தவர் கோபால். தூய்மை பணியாளர். இவருடைய மகன் தினேஷ்வரன் (வயது 11), அங்குள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் கோபால் தனது மகன் தினேஷ்வரனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். இதற்காக அவர் தனது வீட்டில் இருந்து குடியிருப்பு பகுதி வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த குடியிருப்பு பகுதிக்குள் ஒரு சரக்கு ஆட்டோ வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

சரக்கு ஆட்டோ மோதி பலி

அப்போது அந்த சரக்கு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் கோபாலும், தினேஷ்வரனும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது தலையில் பலத்த காயம் அடைந்த தினேஷ்வரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கோபால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்தை பார்த்ததும் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான தினேஷ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்த இடம் குடியிருப்பு பகுதிக்குள் இருக்கும் சாலை ஆகும். இந்த சாலையில் இதுபோன்றுதான் வாகனங்கள் வேகமாக சென்று வருவதாக இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். எனவே வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்க அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story