டீக்கடை உரிமையாளரை தாக்கி கவரிங் சங்கிலி, பணம் பறித்த 6 பேர் கைது


டீக்கடை உரிமையாளரை தாக்கி கவரிங் சங்கிலி, பணம் பறித்த 6 பேர் கைது
x
தினத்தந்தி 14 Aug 2023 7:45 PM GMT (Updated: 14 Aug 2023 7:45 PM GMT)

டீக்கடை உரிமையாளரை தாக்கி கவரிங் சங்கிலி, பணம் பறித்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை

மதுரை,

மதுரை மகபூப்பாளையம் அன்சாரி நகரை சேர்ந்தவர் முகமது பக்ருதீன் (வயது 31). இவர் எஸ்.எஸ்.காலனி சுப்பிரமணிய பிள்ளை தெருவில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. பின்னர் அவர்கள் கத்தியை காட்டி பக்ருதீனை தாக்கி அவர் அணிந்திருந்த சங்கிலி மற்றும் ஆயிரம் ரூபாயை பறித்து தப்பி விட்டனர். இது குறித்து அவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். அதில் தனது கவரிங் சங்கிலி மற்றும் ஆயிரம் ரூபாயை பறித்ததாக தெரிவித்து இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசன், ராம்குமார், வெற்றிச்செல்வன், சூர்யா, சிவகுமார், சதீஷ்குமார் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.


Next Story