மது விற்ற 6 பேர் கைது


மது விற்ற 6 பேர் கைது
x

மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

நச்சலூர்,

நச்சலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் நேற்று போலீசார் அப்பகுதியில் சோதணை மேற்கொண்டனர். அப்போது பாறைப்பட்டி பகுதியில் வினோத் (வயது 32), சரவணன் (36), மேலப்பட்டி பகுதியை சேர்ந்த சிவகுமார் (40) மற்றும் பாறைப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே அதே பகுதியை சேர்ந்த வைரமணி (42), மேலப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (35) ஆகிய 5 பேரும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தோகைமலை அருகே உடையாபட்டி டாஸ்மாக் கடை அருகே கரூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (40) என்பவர் மது விற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து அவரை தோகைமலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story