கோவில் திருவிழாவில் தகராறில் 6 பேர் கைது
கோவில் திருவிழாவில் தகராறில் 6 பேரை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வயலூர் அகரம் காலனியில் கிருஷ்ணன் கோவிலில் கடந்த மாதம் 30-ந் தேதி திருவிழா நடந்தது. இதில் வயலூர் அகரம் காலனி பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 55) என்பவரது வீட்டு அருகே சாமி நிற்காமல் சென்றது. இதனால் சக்திவேல் அவரது தம்பிகள் சுந்தரம் (49), பாபு (38) மற்றும் பாபுவின் மகன் சஞ்சய் (14) ஆகியோர் சாமி வீட்டின் முன்பு நிற்காமல் சென்றது குறித்து கோவில் நிர்வாகி பெருமாளிடம் தட்டி கேட்டனா்.
அப்போது கோவில் நிர்வாகி பெருமாள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் சேர்ந்து சக்திவேல் குடும்பத்தினரை பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சக்திவேல், சுந்தரம், பாபு, சஞ்சய் ஆகியோர் செங்கல்ப்டடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதுகுறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் மப்பேடு போலீசார் கோவில் நிர்வாகி பெருமாள் (49) உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் பெருமாளை கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த 10 பேரையும் தேடி வந்தனர். இதில் ராஜேஷ், (21), அருண்குமார் (25), பாலா (28), லட்சுமணன் (30), ராமன் (30) மற்றும் கண்ணுார் கிராமத்தை சேர்ந்த துரை (27) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.