தமிழகத்தில் அதிகபட்சமாக தேவக்கோட்டையில் 6 செ.மீ மழைப்பதிவு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 6 செ.மீ மழைபதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் விடுத்துள்ள செய்தி அறிக்கையில்,
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஜூலை 12 ஆம் தேதிவரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறந்தபட்ச வெப்பநிலை 28 ஆக இருக்கக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதன் படி தமிழகத்தில் சிவகங்கை, கள்ளக்குறிச்சி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது.
இந்நிலையில் தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 6 செ.மீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் தலா 5 செ.மீ ,விழுப்புரம், வானூர், நீலகிரி பந்தலூர், கோவை சின்கோனோவில் தலா 4 சே.மீ மழைப்பதிவாகியுள்ளது.