கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் 6 பேருக்கு டெங்கு உறுதி
கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் காய்சலுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு காய்ச்சல் காரணமாக 25 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கும்பகோணம், வேப்பத்தூர், நாச்சியார்கோவில், பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் அரியலூர் மாவட்டம் குழவடையான் பகுதியை சேர்ந்த 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்ட 6 பேருக்கும் தனி வார்டில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story