வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள் செத்தன


வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள் செத்தன
x
திருப்பூர்


வெள்ளகோவிலில் வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள் செத்தன. இது போன்ற தொடர் சம்பவங்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

ஆடு வளர்ப்பு தொழில்

வெள்ளகோவில் கல்லாங்காட்டு வலசு பகுதியை சோ்ந்தவா் தங்கவேல் (வயது 51). இவா் கடந்த 30 ஆண்டுளாக தனக்கு சொந்தமான இடத்தில் பட்டி அமைத்து ஆடு வளா்க்கும் தொழில் செய்து வருகிறாா். தற்போது இவா் சுமாா் 50 ஆடுகளை வளத்து வந்துள்ளாா்.

இந்த நிலையில் தங்கவேல் தனது ஆடுகளை கடந்த திங்கட்கிழமை மாலை மேய்ச்சலுக்கு பின்பு பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு தூங்க சென்றுள்ளாா். மறுநாள் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல பட்டிக்குவந்துள்ளாா்.

6 ஆடுகள் செத்தன

அப்போது சில வெறிநாய்கள் ஆடுகளை கடித்து தின்று கொண்டு இருந்துள்ளது. அதனை பாா்த்து அதிா்ச்சி அடைந்த தங்கவேல் சத்தமிட்டுக் கொண்டே வேகமாக ஓடிவந்து நாய்களை விரட்டினாா். மேலும் கடிபட்டு கிடந்த ஆடுகளை பார்த்த போது அதில் 6 ஆடுகள் இறந்து கிடந்தன.

ஒரு ஆடு மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளது. இறந்து போன ஆடுகளின் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சிலா் கூறியதாவது:-

விவசாயிகள் பாதிப்பு

வெள்ளகோவில் பகுதியில் வறட்சி நிலவுவதால் விவசாயத்தைவிட விவசாயிகள் கால்நடை வளா்ப்பையே பொிதும் நம்பி உள்ளோம். இந்த நிலையில் இதுபோன்று ஆடுகள் வெறிநாய்களால் கொல்லப்படும் சம்பவம் எங்களை மனதளவிலும், பொருளாதார ரீதியிலும் பொிதும் பாதிப்படையச் செய்கிறது. பண்ணையாளா்கள் மற்றும் இறைச்சிக்கடைக்காரா்கள் கோழி இறைச்சிக் கழிவுகளை கொண்டு வந்து சாலை ஓரங்களிலும், திறந்த வெளிகளிலும் கொட்டி செல்கின்றனா். அதனை உண்டு பழகிய நாய்கள் இதுபோன்று வெறிநாய்களாக உருவாகிறது.

பின்வு அவை இறைச்சிக்காக விவசாய தோட்டங்களில் வளா்க்கப்படும் ஆடுகள், கோழிகள் போன்ற கால் நடைகளை வேட்டையாட தொடங்குகின்றன. பல இடங்களில் கால்நடைகளை மட்டும் இன்றி பொதுமக்களையும் இந்த வெறிநாய்கள் கடிக்கின்றன. வெள்ளகோவில் பகுதியில் பல இடங்களில் கடந்த சில மாதங்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெறிநாய்களால் வேட்டையாடப்பட்டு உள்ளன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாாிகளுக்கு நோிலும் மனுக்கள் மூலமாகவும் புகாா் தொிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை மேற்கொண்டு வெறிநாய்களை கட்டுப்படுத்துவதோடு, கோழி இறைச்சிகளை திறந்த வெளியில் கொட்டுபவா்கள் மீது உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இ்வ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story