வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள் செத்தன


வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள் செத்தன
x

சிவியாம்பாளையத்தில் வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள் செத்தன.

நாமக்கல்

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே உள்ள சிவியாம்பாளையம் ஊராட்சி குடித்தெருவைச் சேர்ந்தவர் சுமதி (வயது 45). இவர் அங்கு பட்டி அமைத்து 3 ஆடு மற்றும் 3 ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ஆட்டு பட்டிக்கு சென்றார். அங்கு 6 ஆடுகளும் செத்து கிடந்தன. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சுமதி, வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் வேட்டாம்படி கால்நடை மருத்துவருக்கும் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அங்கு வந்த கால்நடை மருத்துவர் சாந்தி, செத்து கிடந்த ஆடுகளை ஆய்வு செய்தார். இதில் வெறிநாய்கள் கடித்து தான் ஆடுகள் செத்தன என உறுதிப்படுத்தினர். மேலும் சிவியாம்பாளையம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து மற்ற விலங்குகள் வராமல் தடுக்க வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.

கடந்த 1-ந் தேதி இதே பகுதியில் விவசாயி கண்ணன் தோட்டத்தில் இருந்த பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 18 ஆடுகளை வெறிநாய்கள் கடித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கதாகும். இந்தநிலையில் மீண்டும் சிவியாம்பாளையம் பகுதியில் ஆடுகளை வெறிநாய்கள் கடித்துக் கொன்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story