தேனீக்கள் கொட்டி 6 பேர் காயம்


தேனீக்கள் கொட்டி 6 பேர் காயம்
x

பெரணமல்லூரில் தேனீக்கள் கொட்டி 6 பேர் காயம்

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

பெரணமல்லூர் பேரூராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சார் பதிவாளர் அலுவலகம் அருகே உள்ளது. இதன் அடிப்பகுதியில் தேனீக்கள் கூடுகட்டி இருக்கிறது.

இந்த நிலையில் நீர்த்தேக்கத் தொட்டியின் அருகே குப்பைகளை எரித்துள்ளனர்.

அப்போது குப்பையில் இருந்து கிளம்பிய புகை தேன்கூட்டின் மேல்பட்டதால் தேனீக்கள் கூட்டில் இருந்து கலைந்து தெருவில் சென்றவர்களை கொட்டியது.

இதில் சதீஷ் (வயது 32), ராமச்சந்திரன் (47), சீனுவாசன் (33), கோபால் (67), செல்வராஜ் (63), ராமமூர்த்தி (71) ஆகிய 6 பேர் காயமடைந்தனர். இவர்கள் பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரணமல்லூர் போலீசார் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Related Tags :
Next Story