தனித்தனி விபத்தில் 6 பேர் காயம்
தனித்தனி விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம்,
திருக்கோவிலூர் தாலுகா டி.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கப்பல்துரை (வயது 24). இவரும் இவரது அண்ணி அஸ்வினி (22), இவருடைய மகள் தரண்யா (2) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே திசையில் பின்னால் வந்த சுற்றுலா வேன் ஒன்று அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கப்பல்துரை உள்ளிட்ட 3 பேரும் காயமடைந்தனர். உடனே அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச்சென்ற கார், விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் செல்லும்போது அந்த கார் மீது அதே திசையில் பின்னால் வந்த மினி லாரி மோதியது. இதில் காரில் பயணம் செய்த பசல்அகமது (38), அவரது தாய் சைசா (60) மற்றும் அப்துல் பாசித் (52) ஆகிய 3 பேரும் காயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்துகள் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.