செல்லியம்மன் கோவிலில் ரூ.6 லட்சம் உண்டியல் காணிக்கை


செல்லியம்மன் கோவிலில் ரூ.6 லட்சம் உண்டியல் காணிக்கை
x

வேலூர் செல்லியம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.6 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளனர்.

வேலூர்

வேலூர் செல்லியம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.6 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளனர்.

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விஷேச நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கோவிலில் 3 மாதத்துக்கு ஒரு முறை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும்.

அதன்படி நேற்று கோவிலில் உள்ள 8 உண்டியல்கள் செயல்அலுவலர்கள் பரந்தாமகண்ணன், நரசிம்மமூர்த்தி, சங்கர், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சுகுமார் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு கோவில் வளாகத்தில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

இந்த பணியில் ஏராளமான தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இதில் ரொக்கமாக ரூ.6 லட்சத்து 9 ஆயிரத்து 432-ம், 4 கிராம் தங்கம், 21 கிராம் வெள்ளி இருந்தது.


Next Story