ரூ.6½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


ரூ.6½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x

நெல்லையில் ரூ.6½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாற்றுதிறனாளிகள் இருந்த இடத்திற்கு கலெக்டர் சென்று கோரிக்கை மனுக்களை வாங்கினார். இதில் இலவச வீட்டுமனை பட்டா, உதவித்தொகை, வேலைவாய்ப்பு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 490 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். அவற்றின் மீது உடனே நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து கூட்டத்தில் 11 பேருக்கு சுய தொழில் செய்ய வங்கி கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், பார்வை குறை உடையோருக்கு கற்றல் உபகரணம், தையல் எந்திரங்கள் என மொத்தம் 62 பேருக்கு ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 240 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், பயிற்சி உதவி கலெக்டர் கோகுல், சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் குமாரதாஸ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.Next Story