நிதி நிறுவன அதிபரை கடத்திய 6 பேர் கைது
செய்யாறு அருகே நிதி நிறுவன அதிபரை கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்யாறு
செய்யாறு அருகே நிதி நிறுவன அதிபரை கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
நிதி நிறுவன அதிபர் கடத்தல்
வெம்பாக்கம் தாலுகா செய்யாறு அருகே நாட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் சுரேஷ், வடிவேலு ஆகியோருடன் அசனமாப்பேட்டை பகுதியில் திருப்பதி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ராமச்சந்திரன் வழக்கம்போல இரவு நிதி நிறுவனத்தை பூட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பெருங்கட்டூர் - பிரம்மதேசம் சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்தொடர்ந்து காரில் வந்தவர்கள் ராமச்சந்திரனை நிறுத்தி வழி கேட்பது போல நாடகமாடி காருக்குள் இழுத்துப் போட்டு கடத்தி சென்றனர். பின்னர் செல்போன் மூலம் ராமச்சந்திரனின் தம்பி ரவிச்சந்திரனிடம் பேசி ராமச்சந்திரனை கடத்தி உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தனிப்படைகள்
இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் மீண்டும் ரவிச்சந்திரனை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம கும்பல் உன் அண்ணன் ராமச்சந்திரனை புதூர் பாலத்தின் அருகே இறக்கி விட்டோம் என தெரிவித்துள்ளனர். பின்னர் போலீசார் ராமச்சந்திரனிடம் கடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து 2 தனிப்படைகள் அமைத்து இவ்வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
6 பேர் கைது
இந்த நிலையில் ராமச்சந்திரனை கடத்திய ராணிப்பேட்டை மாவட்டம் மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 31), ரமேஷ் (37), சிறுகரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (27), காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் கிராமத்தைச் சேர்ந்ததமிழரசன் (24), விக்னேஷ் (24) மற்றும் கார் டிரைவர் மோகன்ராஜ் (25) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்
போலீசார் விசாரணையில் ராமச்சந்திரன் என்பவருக்கும் பிரபாகரன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததும், இதனால் அவரை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
பின்னர் கைது செய்யப்பட்ட 6 பேைரயும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தன