அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேர் கைது


அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேர் கைது
x

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்


விருதுநகர் அருகே பட்டம்புதூரில் சூலக்கரை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மாரியப்பன் போலீசாருடன் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள பட்டாசுஆலை வளாகத்தில் மரத்தடியில் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதையடுத்து பட்டாசுஆலை உரிமையாளர் சிவகாசி யை சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 57) என்பவரிடம் பட்டாசு ஆலை உரிமத்தை வாங்கி பார்த்த போது அதில் பேன்சிரக பட்டாசு தயாரிப்பதற்கு அனுமதி இல்லாதது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு பேன்சி ரக பட்டாசு ரகங்களை தயாரித்துக் கொண்டிருப்பதை பார்த்த போலீசார் அங்கிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து சாக்குப்பையில் கட்டி பாதுகாப்பிற்காக பட்டாசுஆலை வளாகத்தில் வைத்து பூட்டினர். மேலும் விதிகளை மீறி பட்டாசு தயாரித்த பட்டாசுஆலை உரிமையாளர் ராஜமாணிக்கம், போர்மேன் மஞ்சள் ஓடைப்பட்டியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (31), பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பெரிய வாடியூரை சேர்ந்த முத்துஈஸ்வரன் (20), புல்ல கவுண்டன்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (42), கருப்பசாமி (37), இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த ரவிக்குமார் (34) ஆகிய 6 பேரையும் சூலக்கரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Related Tags :
Next Story