கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது
x

கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் சுசீந்திரம் அருகே உள்ள வழுக்கம்பாறை சுடுகாட்டு பகுதியில் சென்றபோது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற 6 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். அதில், 350 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரிடமும் விசாரணை நடத்தினர். அதில், சுசீந்திரம் அக்கறை கடை தெருவை சேர்ந்த கார்த்திக்(வயது 20), வழுக்கம்பாறை பாரதி தெருவை சேர்ந்த சதீஷ்(20), வழுக்கம்பாறை மெயின் ரோட்டை சேர்ந்த விவேக்(20), கொட்டாரம் கீழத்தெருவை சேர்ந்த அருண்(22), வழுக்கம்பாறை பாலகிருஷ்ணன்புதூரை சேர்ந்த பிரவீன்(20), சுசீந்திரம் அக்கரையை சேர்ந்த முத்து (20) என்பதும், அந்த பகுதியில் கஞ்சாவை விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து கஞ்சா பறிமுதல் செய்து 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story