கோவில்களில் திருடியதாக 6 பேருக்கு தர்மஅடி: பொதுமக்கள் தாக்கியதில் சிறுமி சாவு


கோவில்களில் திருடியதாக 6 பேருக்கு தர்மஅடி:  பொதுமக்கள் தாக்கியதில் சிறுமி சாவு
x

கோவில்களில் திருடியதாக 6 பேருக்கு தர்மஅடி: தீவிர சிகிச்சையில் இருந்த கற்பகாம்பிகா நேற்று மாலை பரிதாபமாக இறந்தாள்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர் பகுதியில் சாலையோரங்களில் உள்ள கோவில்களில் பொருட்களை ஒரு கும்பல் திருடிவிட்டு ஆட்டோவில் தப்பிச்செல்வதாக கடந்த 14-ந்தேதி அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் மோட்டார்சைக்கிளில் விரட்டிச்சென்றனர்.

புதுக்கோட்டை அருகே மச்சுவாடி பகுதியில் அந்த ஆட்டோவை வழிமறித்து அதில் இருந்தவர்களை கைகள், கட்டைகளால் சரமாரியாக தாக்கினர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதில் காயமடைந்தவர்கள் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த சத்தியநாராயணசாமி (வயது48), அவரது மனைவி லில்லி புஷ்பா(38) மற்றும் அவரது மகன்கள் விக்னேஷ்வரசாமி(19), சுபமெய்யசாமி(19), மகள்கள் கற்பகாம்பிகா(10), ஆதிலட்சுமி(8) ஆகியோர் என தெரியவந்தது.

இந்த நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த கற்பகாம்பிகா நேற்று மாலை பரிதாபமாக இறந்தாள்.

சிறுமியை தாக்கியவர்களை பிடிக்கவும், இந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story