திருச்சி சிறப்பு முகாமில் 6 பேர் 3-வது நாளாக உண்ணாவிரதம்
திருச்சி சிறப்பு முகாமில் 6 பேர் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்.
திருச்சி
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை, வங்காளதேசம், பல்கேரியா, ருவாண்டா, நைஜீரியா, தெற்கு சூடான் உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறப்பு முகாமில் இருந்தபடியே அவ்வப்போது தங்கள் மீதான வழக்குகள் தொடர்பாக போலீசாரால் அழைத்து செல்லப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 6 பேர் கடந்த 22-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள். முகாமில் இருந்து விடுவிக்கக்கோரியும், தங்கள் மீதான வழக்குகளை முகாமிற்கு வெளியே தங்கி இருந்து கோர்ட்டில் ஆஜராகி கொள்வதாகவும் கூறியும், இந்த உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள். நேற்று 3-வது நாளாக அவர்களுடைய உண்ணாவிரதம் நீடித்தது.
Related Tags :
Next Story