சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது


சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது
x

சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது

நாகப்பட்டினம்

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி‌ கீழ்வேளூர்‌ அருகே திருக்கண்ணங்குடி, எரவாஞ்சேரி, கீழகாவலக்குடி, காக்கழனி ஆகிய பகுதியில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருக்கண்ணங்குடி திருவாசல்படி பகுதியில் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கண்ணன் (வயது 41), எரவாஞ்சேரி சிவன் கோவில் தெரு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் செல்வம் (30), கீழகாவலக்குடி காலனி தெருவில் அண்டக்குடி மேலத்தெருவை சேர்ந்த சவுந்தர்ராஜன் (55), காக்கழனி காலனி தெருவில் அதே பகுதியை சேர்ந்த துரைசாமி மனைவி சாந்தி (47), கீழகாவலக்குடி காளவாய் கரையில் நாகை வெளிப்பாளையம் பப்ளிக் ஆபிஸ் ரோடு பகுதியை சேர்ந்த மணி மனைவி இந்திராணி (48), கோகூர் மாதா கோவில் அருகே நாகூர் வண்ணாங்குளம் வடகரையை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வெற்றிவேல் (35) ஆகிய 6 பேர் சாராயம் விற்றது ெதரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story