இலங்கை அகதி கொலையில் பெண் உள்பட 6 பேர் கைது


இலங்கை அகதி கொலையில் பெண் உள்பட 6 பேர் கைது
x

நெல்லை அருகே இலங்கை அகதி கொலையில் பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 52). பெயிண்டர். இவர் கடந்த 14-ந்தேதி தனது அண்ணன் கந்தையா வீட்டின் மாடியில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் அவரை வெட்டி கொலை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

போலீசார் விசாரணையில் இடப்பிரச்சினை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும், ராமச்சந்திரனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதன்காரணமாக முருகேசன் மனைவி சந்திரா (65) மற்றும் அதே பகுதியை சேர்ந்த குகனேசன் மனைவி நாகநந்தினி (40) தூண்டுதலின்பேரில் முருகேசனின் மகன்களான ரஞ்சித்குமார், அசோக்குமார், குகனேசன் (50), அவரின் மகன்கள் அபிராஜ் (20), ரோசன்ராஜ் (19), துறையூரை சேர்ந்த ரோணி (27) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் சேர்ந்து ராமச்சந்திரனை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

இந்தநிலையில் கங்கைகொண்டான் போலீசார் அபிராஜ், ரோனி, ரோசன்ராஜ், குகனேசன், நாகநந்தினி மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். சிறுவன் கூர்நோக்கு இடத்தில் அடைக்கப்பட்டான். மற்றவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story