ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 6 பேர் கைது
மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை புதூர் போலீசார் பாலாஜி நகரில் ரோந்து சென்றனர். அப்போது கோல்டன் சிட்டி பின்புற பகுதியில் 2 பேர் சந்தேகப்படும்படியாக இருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது எருக்கலை நத்தம் சூர்யா (வயது 25), பாலமேடு வெள்ளையம்பட்டி முத்துப்பட்டி தெரு அஜித் என்ற கருவாயன் (22) என்பதும், அவர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
அண்ணாநகர் போலீசார் எஸ்.எம்.பி. காலனியில் ஆயுதங்களுடன் திரிந்த கரும்பாலை கீழத்தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி (32), எஸ்.எம்.பி. காலனி ஜோதிகுமார் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் பாண்டி கோவில் ரிங் ரோடு அம்மா திடல் அருகே ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த வண்டியூர் காளியம்மன் கோவில் தெரு சூரிய பிரகாஷ் (24), முந்திரிதோப்பு, மவுலானா சாகிப் தெரு உசிலைமணி (34) ஆகியோரையும் அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.