மது விற்ற 6 பேர் கைது
மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதுவை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு அமலாக்க துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் தலைமையிலான போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிரடி சோதனை செய்தனர். இந்த சோதனையில் மது விற்றதாக செல்வராஜ் (வயது 42), தமிழரசன் (60), முத்துப்பாண்டி (32), சரவணன் (55), நாகம்மாள் (65), கண்ணியம்மாள் (65) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 52 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story