மது விற்ற 6 பேர் கைது
மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுவை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலகுராம் தலைமையிலான போலீசார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, செம்பியானத்தை சேர்ந்த பிரபு (வயது 35), பாலவிடுதியை சேர்ந்த முத்துச்சாமி (49), புன்னம் சத்திரத்தை சேர்ந்த வளர்மதி (50), புகழூரை சேர்ந்த திலகுவதி (50), கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த செல்வம் (45), குளித்தலையை சேர்ந்த கேசவன் (38) ஆகிய 6 ேபரும் பல்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மொத்தம் 246 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story