சாராயம் விற்ற 6 பேர் கைது
சாராயம் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தலைவாசல்:-
வாழப்பாடி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் மணிராஜ் (வயது 32). இவர் தனது வீட்டின் அருகே சாராயம் விற்பதாக வாழப்பாடி போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரை கைது செய்த போலீசார், 105 லிட்டர் பாக்கெட் சாராயம் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தி மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதேபோல் பள்ளத்தானூர் பகுதியில் சாராயம் விற்றதாக தர்மபுரி மாவட்டம் சிட்லிங் பகுதியை சேர்ந்த செல்வம் (40) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறுவாச்சூர் கிராமத்தில் ஒரு வீட்டில் சாராயம் விற்றதாக முத்தையன் (19), அருண்குமார் (19), கிருஷ்ணன் (28), வரகூர் சக்திவேல் (42) ஆகிய 4 பேரை தலைவாசல் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 105 லிட்டர் பாக்கெட் சாராயம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.