கள் விற்ற 6 பேர் கைது
நெகமம் அருகே கள் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெகமம்
நெகமம் அருகே உள்ள ஆவலப்பம்பட்டி பகுதியில் கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணப்பெருமாள் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் முகமது மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆவலப்பம்பட்டி பகுதியில் கள் விற்பனை செய்து கொண்டு இருந்த முருகன் கோவில் தோட்டத்தை சேர்ந்த சேனாதிபதி (வயது 45) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 10 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல முக்காடு தோட்டத்து சாலையில் கள் விற்பனை செய்த பன்னீர் செல்வம் (60), செங்காடு தோட்டத்தில் கள் விற்ற திருமலைசாமி (52) , இட்டேரியில் கள் விற்ற சிவசாமி (60), ஆவலப்பம்பட்டி மேற்கு தோட்டத்தில் கள் விற்பனை செய்த மற்றொரு சிவசாமியையும் (54), பஸ் நிலையம் பகுதியில் கள் விற்பனை செய்த முத்துசாமி (60) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.