ஆள்மாறாட்டம் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயன்ற 6 பேர் கைது


ஆள்மாறாட்டம் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயன்ற 6 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2023 1:13 AM IST (Updated: 24 Jun 2023 4:58 PM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூரில் ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்ய முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

மண்ணச்சநல்லூரில் ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்ய முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

பத்திரப்பதிவு

சமயபுரம் அருகே உள்ள இருங்களூரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு அதே ஊரில் சொந்தமாக இடம் உள்ளது. இந்த நிலையில். திருச்சி பீமநகரை சேர்ந்த பெயிண்டர் சண்முகசுந்தரம் (வயது60) என்பவரை, திருச்சியை சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் மண்ணச்சநல்லூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு காரில் அழைத்து வந்தனர். அங்கு இருங்களூரை சேர்ந்த ஆரோக்கியசாமிக்கு சொந்தமான 62 சென்ட் இடத்தை அதே ஊரைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கு பவர் பத்திரம் தயார் செய்து பதிவு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த பத்திரப்பதிவு அலுவலர்கள் இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்து சண்முகசுந்தரத்தை அழைத்து வந்தவர்கள் காரில் தப்பி ஓடி விட்டனர். தொடர்ந்து சண்முகசுந்தரத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

ைகது

விசாரணையில், திருச்சியை சேர்ந்த சிலர் சண்முகசுந்தரத்தை ஆரோக்கியசாமி என்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் கையெழுத்து போட்டால் பணம் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட்டில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் திருச்சி தென்னூரை சேர்ந்த ராஜ்கபூர், மன்னார்புரத்தைச் சேர்ந்த சங்கர், அண்ணா நகரை சேர்ந்த செல்வராஜ், திருச்சி தென்னூரை சேர்ந்த சலீம், நடுஇருங்களூரை சேர்ந்த சாமிதுரை ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


Next Story