மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் சுற்றிய 6 பேர் கைது
மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் சுற்றிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்
மதுரை கீரைத்துரை போலீசார் மேல அனுப்பானடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருட்டு பங்களா அருகே சென்ற போது 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்த ஜீசஸ் ரூபன் என்ற ரூபன் (வயது 30), திருச்சி அரியமங்கலம் நேருஜி தெரு மணிகண்டன் (26), மதுரை காமராஜர்புரம் திருவிக தெரு மாதவன் (18), மதுரை தென்பழஞ்சிதெற்கு தெரு ராஜேஷ் (30), பழனி அடிவாரம் பூபாலன் (32), மதுரை எல்லீஸ்நகர் பாண்டியராஜன் (22) என்பதும், அவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களுடன் சுற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.