கந்தம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது


கந்தம்பாளையம் அருகே  பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
x

கந்தம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

நாமக்கல்

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே சின்னாம்பாளையத்தில் உள்ள மறைவான பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு தேவரடிபாளையத்தை சேர்ந்த சரவணன் (வயது 26), வீரப்பம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (27), இளம்பிள்ளையை சேர்ந்த ஆனந்த் (36), கண்டிபாளையத்தை சேர்ந்த நாகராஜ் (42), கொக்கராயன்பேட்டையை சேர்ந்த சபி (31), காஜா (26) ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.2,300 மற்றும் 6 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story