வியாபாரி வீட்டில் 6 பவுன் நகை 75 ஆயிரம் கொள்ளை
போலீஸ் அதிகாரிகள் போல் நடித்து புகையிலை பொருள் சோதனை நடத்துவதாக கூறி வியாபாரி வீட்டில் 6 பவுன் நகை, 75 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது
கருமத்தம்பட்டி
போலீஸ் அதிகாரிகள் போல் நடித்து புகையிலை பொருள் சோதனை நடத்துவதாக கூறி வியாபாரி வீட்டில் 6 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
புகையிலை பொருட்கள்
கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் ரோடு குருவம்மாள் நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது60). இவருடைய மகன் கவியரசன் (25). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகி றார். கவியரசன், கடந்த 31-ந் தேதி மதியம் 12.30 மணி அளவில் கடையில் இருந்தார்.
அப்போது ஒரு காரில் 4 பேர் வந்தனர். அதில் ஒருவர் காரில் இருக்க, மற்ற 3 பேரும் கடைக்கு சென்று தாங்களை போலீஸ் அதிகாரிகள் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
அவர் கள், கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் வந்து உள்ளது. எனவே கடையில் சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறினர்.
கடையில் சோதனை
அதற்கு கவியரசன் தங்களின் கடையில் புகையிலை பொருட் கள் ஏதும் விற்பனை செய்யப்படுவது இல்லை என்று கூறி உள்ளார். ஆனாலும் அவர்கள் போலீஸ் என்று கூறியதால் கடையில் சோதனை செய்ய அனுமதித்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர்கள் அந்த கடையில் சோதனை செய்த னர். ஆனால் அங்கு புகையிலை பொருட்கள் எதுவும் சிக்க வில்லை.
இதையடுத்து அவர்கள், கவியரசனிடம் வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் அங்கு சோதனை செய்ய வேண்டும். எனவே வீட்டை காட்டுமாறு கூறி உள்ளனர்.
விசாரணை
அதன்படி அவர்களுடன் சென்று கவியரசன் வீட்டை காட்டி உள்ளார். அங்கு கவியரசன் மற்று ஜெயராமன் ஆகியோரை வீட்டில் ஒரு அறையில் அமர வைத்தனர். பின்னர் அவர்கள் வீட்டில் ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர்.
அதன் முடிவில் தங்களுக்கு தவறான தகவல் வந்து விட்டதாக கூறினர். ஆனாலும் கவியரசனிடம் விசாரணை நடத்த வேண் டும் என்று கூறி காரில் ஏற்றி அழைத்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும் அவரை கீழே இறக்கி விட்டு அந்த 4 பேரும் வேகமாக சென்றனர்.
நகை, பணம் கொள்ளை
இதனால் சந்தேகம் அடைந்த கவியரசன் வீட்டிற்கு விரைந்து வந்து பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்தார். இதில் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.75 ஆயிரம் பணத்தை காணவில்லை. அதை போலீஸ் அதிகாரிகள் என்று கூறி வந்தவர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கவியரசன் சூலூர் காவல் நிலை யம் சென்று தனது வீட்டில் போலீஸ் அதிகாரிகள் என்று கூறி சோதனை நடத்தி நகை, பணம் திருடப்பட்டது தொடர்பாக புகார் அளித்தார்.
அதன் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் மளிகை கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், போலீஸ் போல் நடித்து மர்ம நபர்கள் கவியரசன் வீட்டில் பணம், நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
பரபரப்பு
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு கார் வருவதும் அதில் இருந்து 3 பேர் இறங்கி நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகையிலை பொருட்கள் சோதனை என்ற பெயரில் போலீஸ் அதிகாரிகள் போல் நடித்து மளிகை கடை வியாபாரி வீட்டில் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.