வீட்டில் 6 பவுன் நகை திருட்டு


வீட்டில் 6 பவுன் நகை திருட்டு
x
சேலம்

சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் சூர்யகுமார். இவருடைய மனைவி கலாவதி (வயது 49). இவர், நேற்று முன்தினம் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் வெளியே சென்றிருந்தார். சிறிதுநேரம் கழித்து மீண்டும் திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கலாவதி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 6 கிராம் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகையை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story