திருச்சி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 6 ஆயிரத்து 95 பேர் எழுதினர்

திருச்சி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 6 ஆயிரத்து 95 பேர் எழுதினர்
x

திருச்சி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 6 ஆயிரத்து 95 பேர் எழுதினர்.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 6 ஆயிரத்து 95 பேர் எழுதினர்.

7 தேர்வு மையம்

சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களுக்கான எழுத்துத்ேதர்வு நேற்று திருச்சி மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 7,402 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தேர்வு அறைக்குள் தேர்வர்களை காலை 8 மணி வரை மைய கண்காணிப்பாளர்கள் அனுமதித்தனர். அதற்கு மேல் வந்தவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

6,095 பேர் தேர்வு எழுதினர்

இந்த தேர்வு காலை 8.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. இந்த முதல் கட்ட தேர்வில் திருச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்து இருந்த 7 ஆயிரத்து 402 பேரில் ஆண்கள் 4,555 பேரும், பெண்கள் 1,540 பேர் என மொத்தம் 6,095 பேர் தேர்வு எழுதினர். இதில் 961 ஆண்கள், 346 பெண்கள் என மொத்தம் 1,307 பேர் தேர்வு எழுத வரவில்லை. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தேர்வு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டார். 2-ம் கட்ட தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

Next Story