புதிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 6 வார பயிற்சி தொடங்கியது


புதிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 6 வார பயிற்சி தொடங்கியது
x

புதிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 6 வார பயிற்சி தொடங்கியது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 44 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 6 வார நிர்வாக பயிற்சி பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது. பயிற்சியினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்து கிராம நிர்வாக அலுவலர்களிடம் பயிற்சியை முறையாக கற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் பணியாற்ற வேண்டும், என்றார். இந்த பயிற்சி வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கவிதா (ஆலத்தூர்), சின்னதுரை (குன்னம்), பெரம்பலூர் தலைமையிடத்து வருவாய் ஆய்வாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story