6 மின் மோட்டார்களில் ஒயர் திருட்டு
திருவெண்ணெய்நல்லூரில் 6 மின் மோட்டார்களில் ஒயர் திருட்டு
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் ஏரி மற்றும் ராகவன் வாய்க்கால் பகுதிகளில் விவசாயிகள் பெருமளவில் நெல் மற்றும் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த நாராயணன் மகன் வெங்கட்நாராயணன், மாசிலாமணி மகன் முருகன், கோவிந்தன் மகன் தண்டபாணி பஞ்சவர்ணம் மகன் ரமேஷ், நாராயணன் மகன் காமராஜ் ஆகியோரின் விவசாய நிலங்களில் இருந்த 6 மின் மோட்டார்களில் உள்ள ஒயர் உள்ளிட்ட பொருள்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய நிலங்கள் மின் ஒயர் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்செல்வது தொடர் கதையாக இருந்து வருவதாகவும், இதனால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாததால் அவைகள் காய்ந்து பட்டுப்போகும் நிலை ஏற்படுவதால் மின்மோட்டார்களில் உள்ள ஒயர் உள்ளிட்ட பொருட்களை திருடிச்செல்லும் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.