வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபருக்கு 6 ஆண்டு சிறை


வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபருக்கு 6 ஆண்டு சிறை
x
திருப்பூர்


ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையம் சி.கே.என் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிதுரை (வயது32), இவரது மனைவி பிரியங்கா (27). கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாண்டித்துரை வீட்டிற்கு வெளியில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் குளியலறையில் வெளியில் பூட்டிவிட்டு வீட்டுக்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த பிரிங்கா அணிந்திருந்த 4½ பவுன் சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது கண் விழித்துக் கொண்ட பிரியங்கா வாலிபரை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டுள்ளார்.அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்குச் சென்ற ஊத்துக்குளி போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்த போது அவர் திருப்பூர் மண்ணரை கருமாராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் (33) என்பதும் அவர் மீது அனுப்பர்பாளையம், நல்லூர், மற்றும் திருப்பூர் போலீஸ் நிலையங்களில் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இவ்வழக்கு ஊத்துக்குளி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நீதிபதி தரணிதார் குற்றம் சாட்டப்பட்ட கணேசுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.


Next Story