தொழிலாளிக்கு 6 ஆண்டுகள் சிறை


தொழிலாளிக்கு 6 ஆண்டுகள் சிறை
x

போக்சோவில் கைதான தொழிலாளிக்கு, 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டு உத்தரவிட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வடக்கு தாதநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 39). கூலித்தொழிலாளி. கடந்த 2020-ம் ஆண்டு இவர், 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பழனி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கற்பகவள்ளி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் காளிமுத்து மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது திண்டுக்கல் விரைவு மகிளா கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட காளிமுத்துவுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.


Next Story