ஜெர்மனியில் நடைபெற உள்ள ஜவுளி கண்காட்சியில் கரூரில் இருந்து 60 நிறுவனங்கள் பங்கேற்பு: சங்க தலைவர் பேட்டி


ஜெர்மனியில் நடைபெற உள்ள ஜவுளி கண்காட்சியில் கரூரில் இருந்து 60 நிறுவனங்கள் பங்கேற்பு: சங்க தலைவர் பேட்டி
x

ஜெர்மனியில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜவுளி கண்காட்சியில் கரூரில் இருந்து 60 நிறுவனங்கள் பங்கு பெறுகிற என ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.

கரூர்

ஆலோசனை கூட்டம்

கரூரில் ஜெர்மனியில் அடுத்த ஆண்டு (2023) நடைபெற உள்ள ஜவுளி கண்காட்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து முன்னிலை வகிக்தார்.

அப்போது சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜவுளி பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அவர்களுடைய பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக உலக அளவில் மிகப்பெரிய ஜவுளி கண்காட்சி ஜெர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் நடைபெற்று வருகிறது. அந்த ஜவுளி கண்காட்சியில் உலகளவில் இருக்கக்கூடிய பல ஜவுளி நிறுவனங்கள் அவர்களுடைய பொருட்களை காட்சிப்படுத்தி, புதிய வாடிக்கையாளர்களை பெறுவதும், புதிய ஆர்டர்களை பெற்று வருகின்றனர்.

60 நிறுவனங்கள் பங்கேற்பு

கரூர் நகரிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60 நிறுவனங்கள் அவர்களது பொருட்களை காட்சிப்படுத்தி வருகிறார்கள். இந்த கண்காட்சியில் பங்கேற்கும் ஜவுளி நிறுவனங்கள் அவர்களது ஜவுளி பொருட்களை எவ்வாறு தயாரிக்கலாம்? அடுத்த ஆண்டு இருக்கக்கூடிய கலர், டிசைன், டிரெண்ட்ஸ் எப்படி இருக்கிறது? ஜவுளி கண்காட்சியில் கலந்து கொள்ளும் போது அவர்களுடைய பொருட்களை எவ்வாறு காட்சிப்படுத்த வேண்டும் என்று ஜவுளி நிறுவனங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள், அவர்களின் மொத்த ஆர்டரில் 30 சதவீத ஆர்டர்களை கண்காட்சியில் இருந்து பெறுவார்கள். இக்கண்காட்சியில் இந்தியாவில் இருந்து 300 நிறுவனங்கள் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், கரூரில் உள்ள ஜவுளி நிறுவனங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.


Next Story