டிரைவர், மருத்துவ உதவியாளர்கள் 60 பேர் தேர்வு


டிரைவர், மருத்துவ உதவியாளர்கள் 60 பேர் தேர்வு
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

108 ஆம்புலன்சில் பணியாற்ற டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்


கோவை

108 ஆம்புலன்சில் பணியாற்ற டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

108 ஆம்புலன்ஸ்

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகி றது. இதில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் கள் பணிக்கு ஆட்கள் தேர்வு நேற்று கோவை ரெயில் நிலையம் அருகே தாமஸ் ஹாலில் நடந்தது. இதில் கோவை நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர், உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட் டது. இதையடுத்து தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இது குறித்து கோயம்புத்தூர், நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் செல்வமுத்துகுமார் கூறியதாவது:-

டிரைவர்கள்

டிரைவர் பணிக்கு ஓட்டுனர் உரிமம் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுப வர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,235 வழங்கப்படும்.

அவர்களுக்கு எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனித வளத்துறை நேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்துவ தேர்வு, சாலை விதி தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி வழங்கப்படும்.

மருத்துவ உதவியாளர்

மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி.நர்சிங், அல்லது பி.எஸ்சி.விலங்கியல், பி.எஸ்சி.தாவரவியல், உயிரி-வேதியியல் ஆகியவற்றில் ஏதோ ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

அவர்களுக்கு எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம் உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி, மனிதவளத்துறையின் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுபவர் களுக்கு மாத ஊதியம் ரூ.15,435 வழங்கப்படும்.

60 பேர் தேர்வு

நேர்முக தேர்வுக்கு மொத்தம் 223 பேர் வந்தனர். இதில் டிரைவருக்கு 30 பேர், அவசரகால சிகிச்சை உதவியாளர் பணிக்கு 30 பேர் என மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு சென்னையில் இருந்து பணி உத்தரவு அனுப்பி வைக்கப்ப டும். அதன்பிறகு அவர்கள் பணியில் சேருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story